tamilnadu

வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்

சென்னை:
வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஒரு கிலோ 150 ரூபாயை தொட்டுள்ளது.  மழையால்  வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல்பாதியாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.  டிசம்பர் 2 அன்று  ரூ.110 ஆக உயர்ந்தது. வியாழனன்று10 ரூபாய் உயர்ந்து கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூப்பர் மார்க்கெட் கடைகளில் 180 ரூபாய் வரை விற்கிறார்கள்.

;